புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
இந்தியா

குளியலறையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் சடலமாக மீட்பு: உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி!

குளியலறையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் சடலமாக மீட்பு: உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் குளியலறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ச்சா காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ரஷ்மி கௌதம் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

 

குளியலறையில் அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

 

ரஷ்மி கௌதமின் மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அவர் உயிரிழந்த சூழ்நிலை தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதற்கிடையே, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.