குன்னூர் அருகே குடியிருப்புப் பகுதிகளில் உலவும் 2 சிறுத்தைகள் – பொதுமக்கள் அச்சம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள இளித்தொரை மற்றும் சந்திரா காலணி பகுதிகளில் இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே சுற்றித்திரியும் சிறுத்தைகள், அங்குள்ள ஆடு, நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளை வேட்டையாடி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
சிறுத்தைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குன்னூர் மற்றும் கட்டபெட்டு வனத்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அச்சுறுத்தி வரும் சிறுத்தைகளை பாதுகாப்பான முறையில் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




கருத்துகள் (0)