ஞாயிறு, நவம்பர் 15, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

குடும்பத் தகராறில் அறைக்குள் பூட்டப்பட்ட தாய், 6 வயது குழந்தை.. வைரலான வீடியோவால் விரைந்து மீட்ட போலீசார்!

குடும்பத் தகராறில் அறைக்குள் பூட்டப்பட்ட தாய், 6 வயது குழந்தை.. வைரலான வீடியோவால் விரைந்து மீட்ட போலீசார்!

சென்னை மணலி சி.பி.சி.எல். நகர் பகுதியில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக இளம்பெண் ஒருவர் தனது 6 வயது பெண் குழந்தையுடன் வீட்டின் அறைக்குள் இருந்துள்ளார். அப்போது அவரது கணவர் அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தாயும் குழந்தையும் அறையை விட்டு வெளியேற முடியாமல் தவித்துள்ளனர்.

 

நீண்ட நேரமாகியும் கதவைத் திறந்து வெளியே வர முடியாததால் செய்வதறியாது இருந்த அந்தப் பெண், உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளார். மேலும், தங்களின் நிலைமை குறித்து விளக்கும் வீடியோ ஒன்றையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி பலரது கவனத்தையும் பெற்றது.

 

இதையடுத்து தகவல் அறிந்த மணலி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அறைக்குள் சிக்கியிருந்த இளம்பெண் மற்றும் அவரது 6 வயது குழந்தை ஆகிய இருவரையும் பத்திரமாக மீட்டனர். குடும்பத் தகராறு காரணமாக தாயும் குழந்தையும் அறைக்குள் சிக்கித் தவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.