மகள் நினைவாக விஜய் ஆண்டனி எடுத்த முடிவு – உருக்கமாகப் பகிர்ந்த மனைவி பாத்திமா!

மறைந்த தனது மூத்த மகள் மீராவின் நினைவாக, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சில தனிப்பட்ட முடிவுகளை எடுத்துள்ளதாக அவரது மனைவி பாத்திமா தெரிவித்துள்ளார். 'அப்பா குட்டி' திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், மகளுடன் தொடர்புடைய உருக்கமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
மீரா கல்லூரிக்குச் செல்வதற்காக 50-க்கும் மேற்பட்ட ஷூக்கள் வாங்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவற்றை அணிவதற்கு முன்பே அவர் மறைந்துவிட்டதாகவும் பாத்திமா குறிப்பிட்டுள்ளார். இதனால், இனிமேல் தானும் செருப்பு அணியப் போவதில்லை என விஜய் ஆண்டனி முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மகள் கடைசியாக அணிந்திருந்த கைக்கடிகாரத்தை மட்டுமே விஜய் ஆண்டனி இன்றளவும் பயன்படுத்தி வருவதாகவும் பாத்திமா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மறைந்த மகளின் நினைவுகளைப் போற்றும் வகையில் விஜய் ஆண்டனி தொடர்ந்து அந்தப் பொருளைப் பயன்படுத்தி வருவது நிகழ்ச்சியில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)