புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
சினிமா

நடிகைகளை தேவையற்ற விமர்சனங்களுக்கு உள்ளாக்க வேண்டாம் – ஊர்வசி ரவுத்தேலா வலியுறுத்தல்!

நடிகைகளை தேவையற்ற விமர்சனங்களுக்கு உள்ளாக்க வேண்டாம் – ஊர்வசி ரவுத்தேலா வலியுறுத்தல்!

திரையுலகில் நடிகர்கள் செய்யும் செயல்களை ரசிகர்கள் பலரும் உற்சாகமாகக் கொண்டாடும் நிலையில், நடிகைகள் தெரியாமல் செய்யும் சிறிய தவறுகளைக்கூடப் பெரிதுபடுத்தி விமர்சிப்பதாக நடிகை ஊர்வசி ரவுத்தேலா தெரிவித்துள்ளார். ஆண் நடிகர்களுக்கும் பெண் நடிகைகளுக்கும் இடையே ரசிகர்களின் அணுகுமுறையில் இத்தகைய வேறுபாடு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

நடிகைகள் எதிர்கொள்ளும் இந்தத் தொடர் விமர்சனங்கள் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், எதையும் செய்யும்போது விமர்சனத்திற்கு ஆளாகிவிடுவோமோ என்ற அச்சத்தையும் உருவாக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிய தவறுகளுக்குக்கூட கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

ரசிகர்களை மகிழ்விப்பதற்காகப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடும் நடிகைகளை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், குறைந்தபட்சம் அவர்கள் மீது ஆதாரமற்ற மற்றும் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஊர்வசி ரவுத்தேலா வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.