மாமல்லபுரத்தில் தவெக எம்எல்ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு! 2 மணி நேரம் 45 நிமிடங்கள் உறுப்பினர்களுடன் ஆலோசித்த முதலமைச்சர் விஜய்!

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது. சுமார் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
குறிப்பாக, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதிகளில் மேற்கொண்டு வரும் பணிகள், பொதுமக்களின் தேவைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதுடன், அரசின் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் முழுமையாகக் கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியத்தையும் விஜய் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
தொகுதிகளில் நடைபெறும் பணிகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படவும் எம்எல்ஏ-க்களுக்கு முதலமைச்சர் பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், தொகுதி சார்ந்த பணிகளைத் தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சுமார் மூன்று மணி நேரத்தை நெருங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்தகட்ட செயல்பாடுகளில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)