மாமல்லபுரத்தில் தவெக எம்எல்ஏ-க்கள் கூட்டம்! பெண் எம்எல்ஏ-க்களை முதலில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்!

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், பெண் எம்எல்ஏ-க்களை முதலமைச்சர் விஜய் முதலில் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சந்திப்பின்போது, கடந்த ஆறு மாதங்களாகத் தங்களது சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொண்ட பணிகள், மக்களின் கோரிக்கைகள் மற்றும் தொகுதி சார்ந்த முக்கியப் பிரச்சினைகள் குறித்து பெண் எம்எல்ஏ-க்களிடம் விஜய் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தொகுதிகளில் நிலவும் சூழல்கள் மற்றும் மக்கள் நலப் பணிகள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றதாகத் தெரிகிறது.
பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணிகளை முடித்துக்கொண்டு முதலில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும், அதன்பிறகு மற்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைகள் தொடர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண் எம்எல்ஏ-க்கள் இதுவரை சர்ச்சைகளில் சிக்காத சூழலில், அவர்களை முதலில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் தொகுதி நிலவரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)