மதுரை தனிஷ்க் கொள்ளை: கண்மாய், மலைப்பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!

மதுரையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மாடக்குளம் கண்மாய் பகுதி, ரயில் தண்டவாளங்களை ஒட்டிய இடங்கள் மற்றும் கோபாலி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை கொள்ளையர்கள் மாடக்குளம் கண்மாய் பகுதியில் எங்காவது மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அந்தப் பகுதிகளில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் வீட்டிலும் காவல் துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கொள்ளை தொடர்பான தடயங்களையும், நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தையும் கண்டறியும் நோக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)