சனி, நவம்பர் 14, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

நெற்பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 1 கடைசி நாள்! விவசாயிகளுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

நெற்பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 1 கடைசி நாள்! விவசாயிகளுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ள வரும் டிசம்பர் 1ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-2027ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, குத்தகை அடிப்படையில் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, காப்பீட்டுப் பதிவுக்கான எஃப்.ஐ.டி. (FID) மற்றும் ஆதார் ஓடிபி (OTP) தொடர்பான நடைமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய தளர்வுகளை வழங்கியுள்ளது.

 

இந்த மாற்றங்கள் மூலம் குத்தகை விவசாயிகள் உள்ளிட்ட கூடுதல் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை தங்களது நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்யாமல் விடுபட்டுள்ள விவசாயிகள், கடைசி தேதியைத் தவறவிடாமல் உடனடியாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என வேளாண்துறை அமைச்சர் வினோத் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், விவசாயிகள் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.