ஞாயிறு, நவம்பர் 15, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மதுரை காவல் நிலையத்தில் ஓட்டுநர் தற்கொலை: ஆய்வாளர் உட்பட 2 காவலர்கள் சஸ்பெண்ட்!

மதுரை காவல் நிலையத்தில் ஓட்டுநர் தற்கொலை: ஆய்வாளர் உட்பட 2 காவலர்கள் சஸ்பெண்ட்!

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற ஓட்டுநர் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாலகிருஷ்ணனின் உயிரிழப்புக்கு காவல்துறையினரின் அலட்சியமே காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, செக்கானூரணி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.