மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது; 5 கிலோ நகைகள் மீட்பு!

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக, திருப்பாலை பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான மீனாட்சி என்ற இளம்பெண்ணையும், இந்த வழக்கில் தொடர்புடைய பட்டதாரி இளைஞரின் தந்தை சுரேஷ் என்பவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நிஷாந்த் என்பவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரைப் பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.




கருத்துகள் (0)