திங்கள், நவம்பர் 16, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மதுரை காவல் நிலைய மர்ம மரணம்.. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட வழக்கு!

மதுரை காவல் நிலைய மர்ம மரணம்.. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட வழக்கு!

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட லாரி ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

தான் ஓட்டி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததாகப் புகார் அளிப்பதற்காக காவல் நிலையம் சென்ற பாலசுப்பிரமணியன், பின்னர் காவல் நிலையக் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பல்வேறு கேள்விகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியதுடன், காவல்துறையினர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், சம்பவத்தின் உண்மை நிலையை கண்டறியும் வகையில் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.