நாளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில்!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், பூந்தமல்லி - வடபழனி இடையேயான முதல் சேவை நாளை (அக்.11) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட உள்ளது. தொடர்ந்து அக்டோபர் 12 முதல் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, உச்ச நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு ரயிலும் இயங்கவுள்ளது. விடுமுறை நாட்கள் மற்றும் நெரிசல் இல்லாத நேரங்களில் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.




கருத்துகள் (0)