சனி, நவம்பர் 14, 2026
உண்மையின் குரல்
இந்தியா

பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை; மூத்த மருத்துவர் கைது – கேரளாவில் பரபரப்பு!

பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை; மூத்த மருத்துவர் கைது – கேரளாவில் பரபரப்பு!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மூத்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டாக்டர் வினு என்பவர் மீது இந்தப் புகார் எழுந்துள்ளது. மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் பயிற்சி மருத்துவர், நோயாளி ஒருவரின் சிகிச்சை தொடர்பாக ஆலோசனை பெறுவதற்காக நேற்று நண்பகல் மூத்த மருத்துவரை அணுகியுள்ளார். அப்போது டாக்டர் வினு தன்னிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

 

இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், டாக்டர் வினு மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் மருத்துவத் துறையினர் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மருத்துவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, புகாரின் பின்னணி மற்றும் சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.