திங்கள், நவம்பர் 16, 2026
உண்மையின் குரல்
இந்தியா

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன்.. 18 பக்க கடிதம் எழுதி இளம்பெண் தற்கொலை!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன்.. 18 பக்க கடிதம் எழுதி இளம்பெண் தற்கொலை!

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் நதிவாடா கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மிதா (24), காவல்துறையில் பணியில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கான தேர்வுக்குத் தயாராகி வந்தார். இந்நிலையில், அனில் என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் காதல் உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என அனில் உறுதியளித்திருந்ததாகவும், பின்னர் சாதி வேறுபாட்டைக் காரணம் காட்டி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மனவேதனை அடைந்த சுஷ்மிதா, 18 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

 

இந்த சம்பவம் தொடர்பாக அனில் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இளம்பெண்ணின் மரணத்திற்கான காரணங்கள் மற்றும் கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.