சென்னை வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – 198 பேர் அவசரமாக வெளியேற்றம்!

ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு நடைமுறைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. அதில் பயணம் செய்த 192 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 198 பேரும் எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் விமானத்தில் முழுமையான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விமானத்தில் வெடிகுண்டு ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.




கருத்துகள் (0)