புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
இந்தியா

பிரசாதத்தைத் தொட்டு சாப்பிட்ட 4 வயது மகள் அடித்துக் கொலை? தாயை கைது செய்து போலீசார் விசாரணை!

பிரசாதத்தைத் தொட்டு சாப்பிட்ட 4 வயது மகள் அடித்துக் கொலை? தாயை கைது செய்து போலீசார் விசாரணை!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் சத்துப் பூஜைக்காக வீட்டில் பிரசாதம் தயாரிக்கப்பட்டிருந்த நிலையில், அதைத் தொட்டு சாப்பிட்டதாகக் கூறி 4 வயது சிறுமியை அவரது தாயே கடுமையாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சுஹானி குமாரி என்ற 4 வயது சிறுமி, தனது வீட்டில் சத்துப் பூஜைக்காகத் தயாரிக்கப்பட்டிருந்த பிரசாதத்தைத் தொட்டு சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது தாய் ரீனா குமாரி, சிறுமியை சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிகிறது. தாயின் தாக்குதலில் குழந்தைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

 

இதையடுத்து, காயமடைந்த சிறுமியை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

 

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து, சிறுமியின் தாய் ரீனா குமாரியைக் கைது செய்த போலீசார், குழந்தையின் உயிரிழப்புக்கான சூழ்நிலைகள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.