ஷாருக்கான் படப் பாடலுக்கு ஜார்ஜிய சிறுமி நடனம்: ஒரே நாளில் 4.4 கோடி பார்வைகளைக் கடந்த வீடியோ!

இந்தியத் திரைப்படப் பாடல்களுக்கு வெளிநாடுகளிலும் எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது என்பதை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில், ஜார்ஜியாவைச் சேர்ந்த சிறுமியின் நடன வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஷாருக்கான், கஜோல் நடிப்பில் வெளியான 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' திரைப்படத்தின் பிரபலமான 'மெஹந்தி லகா கே ரக்னா' பாடலுக்கு அந்தச் சிறுமி நடனமாடியுள்ளார்.
குளிர்காலத்தில் தனது தாத்தாவுடன் நெருப்புக்கு அருகில் அமர்ந்திருந்த சிறுமி, அந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கியதும் உற்சாகமடைந்து எழுந்து நடனமாடினார். பாடலின் இசைக்கு ஏற்ற வகையில் அவர் வெளிப்படுத்திய நடன அசைவுகளும் அழகான முகபாவனைகளும் பார்ப்பவர்களை வெகுவாகக் கவர்ந்தன.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து பலராலும் பார்க்கப்பட்டு வேகமாகப் பரவியது. வெளியான ஒரே நாளில் 4.4 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவுக்கு இந்திய ரசிகர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாலிவுட் திரைப்படப் பாடல் இன்றும் வெளிநாட்டுச் சிறுமியைக் கவர்ந்து நடனமாட வைத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.




கருத்துகள் (0)