தமிழகம், புதுச்சேரியின் 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

புயல் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 முக்கிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இந்த எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, மீனவர்கள் மற்றும் கடல்சார் பணிகளில் ஈடுபடுவோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியமாகும்.




கருத்துகள் (0)