கோவையில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழைநீர்! நேரில் ஆய்வு செய்த அமைச்சர்!

கோவை செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து வெளியேறிய உபரி நீர், செல்வபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமைச்சர் சம்பத்குமார், மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி ஆணையர் ரவி தேஜா ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள நீரை விரைவாக வெளியேற்றுவதற்கான பணிகளைத் துரிதப்படுத்தவும், மக்களின் சிரமங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.




கருத்துகள் (0)