புதன், அக்டோபர் 28, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிய விவகாரம்: சிறைக்காவலர்கள் சஸ்பெண்ட்!

தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிய விவகாரம்: சிறைக்காவலர்கள் சஸ்பெண்ட்!

 

 

தேனி தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தைத் தொடர்ந்து, பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படும் சிறைக்காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அவர்கள் பிற பகுதிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கைதிகளை விரைவில் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.