தமிழகத்தில் தங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு!

தமிழகத்தில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.1,04,680க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.400 அதிகரித்து ரூ.1,05,080 ஆக உள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.13,135க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே, வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.220க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை தற்போதைய நிலையில் நிலையாக உள்ளது.




கருத்துகள் (0)