செவ்வாய், அக்டோபர் 27, 2026
உண்மையின் குரல்
அரசியல்

தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிய விவகாரம்: தமிழக அரசை விமர்சித்த கனிமொழி!

தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிய விவகாரம்: தமிழக அரசை விமர்சித்த கனிமொழி!

 

 

தேனி தேக்கம்பட்டி சிறையிலிருந்து காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். குற்றவாளிகளைக் கைது செய்வதிலும், சிறையில் உள்ள கைதிகளைப் பாதுகாப்பதிலும் அரசு தோல்வியடைந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

மேலும், இந்தச் சம்பவத்தை நிர்வாகத் தோல்வி எனக் குறிப்பிட்ட கனிமொழி, இதற்கு தவெக-வின் ‘போலீஸ் ஐடி விங்’ என்ன விளக்கம் அளிக்கப் போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சிறையிலிருந்து கைதிகள் தப்பிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.