புதன், நவம்பர் 11, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

திருமண வரன் புகார் விசாரணைக்குச் சென்ற போலீஸ் ஏட்டுவுக்கு பாலியல் புகார் – அதிரடியாக சஸ்பெண்ட்!

திருமண வரன் புகார் விசாரணைக்குச் சென்ற போலீஸ் ஏட்டுவுக்கு பாலியல் புகார் – அதிரடியாக சஸ்பெண்ட்!

தூத்துக்குடி மாவட்டத்தில் திருமண வரன் தொடர்பான புகாரை விசாரிக்கச் சென்ற தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு மீது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

 

தூத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்த செல்வின் பிரபு (37), தனிப்பிரிவு போலீஸ் ஏட்டாகப் பணியாற்றி வந்தார். இவர் திருமண வரன் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஒரு பெண்ணின் வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக தருவைகுளம் போலீசார் செல்வின் பிரபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புகாருக்கு உள்ளான போலீஸ் ஏட்டு செல்வின் பிரபுவை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.