புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
விளையாட்டு

தோனியை நினைத்து எப்போதும் பெருமைப்படுவேன் மஹி; சாக்ஷி தோனியின் நெகிழ்ச்சிப் பதிவு!

தோனியை நினைத்து எப்போதும் பெருமைப்படுவேன் மஹி; சாக்ஷி தோனியின் நெகிழ்ச்சிப் பதிவு!

ஐபிஎல் தொடரிலிருந்து தோனி ஓய்வு பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவரது மனைவி சாக்ஷி தோனி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

தனது பதிவில், சில புதிய அழகான பயணங்கள் தொடங்குவதற்கு முன்பாக ஏற்கெனவே தொடர்ந்து வந்த சில பயணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருக்கும் என்று சாக்ஷி குறிப்பிட்டுள்ளார். தோனியின் கிரிக்கெட் பயணத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

 

இத்தனை ஆண்டுகளாக தோனியின் விளையாட்டை ரசித்து, அவர் மீது அன்பு செலுத்தி, ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவாகவும் நம்பிக்கையுடனும் இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 

மேலும், தோனியின் சாதனைகளையும் அவரது நீண்ட கால கிரிக்கெட் பயணத்தையும் நினைவுகூரும் வகையில், "எப்போதும் உங்களை நினைத்துப் பெருமை கொள்வேன் மஹி" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

 

சாக்ஷி தோனியின் இந்தப் பதிவு தோனியின் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.