ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக 7 வீரர்களை விடுவித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

ஐபிஎல் 2027 தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஆவேஷ் கான், வனிந்து ஹசரங்கா உள்ளிட்ட 7 வீரர்களை அணியிலிருந்து விடுவித்துள்ளது.
அவர்களுடன் ஹிம்மத் சிங், ப்ரீட்ஸ்கே, நமன், அன்ரிச் மற்றும் ஜார்ஜ் லிண்டே ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, முகமது ஷமி மற்றும் மணிமாறன் ஆகியோர் ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, வரும் டிசம்பர் 16ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ள மினி ஏலத்தில் புதிய வீரர்களைத் தேர்வு செய்து அணியை வலுப்படுத்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்வாகம் தயாராகி வருகிறது.




கருத்துகள் (0)