தோப்பு வெங்கடாசலத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க திமுக திட்டமா? பெருந்துறை தொகுதியில் புதிய அரசியல் நகர்வு!

திமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தை மீண்டும் கட்சியில் இணைத்து, பெருந்துறை தொகுதியில் வேட்பாளராக நிறுத்த தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் அக்கட்சிக்குத் திரும்பவும் அவர் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பெருந்துறை தொகுதியில் திமுக இதுவரை வெற்றி பெற்றதில்லை எனக் கூறப்படும் நிலையில், கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரிடம் தோப்பு வெங்கடாசலம் 9,693 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவரது அடுத்தகட்ட அரசியல் முடிவு குறித்த தகவல்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.




கருத்துகள் (0)