வியாழன், அக்டோபர் 29, 2026
உண்மையின் குரல்
அரசியல்

“என்னை போட்டுத் தள்ள ப்ளான்.. இடைத்தேர்தலை கொண்டு வரலாமா என பேசினாங்க” – அமைச்சர் விஸ்வநாதன் பரபரப்பு..

“என்னை போட்டுத் தள்ள ப்ளான்.. இடைத்தேர்தலை கொண்டு வரலாமா என பேசினாங்க” – அமைச்சர் விஸ்வநாதன் பரபரப்பு..

 

 

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நிறைவு பெற்ற அரசு திட்டப் பணிகளை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மற்றும் கூட்டணி அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்ததால்தான் திமுக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அமைச்சர் விஸ்வநாதன் கூறினார். மேலும், தங்களது உழைப்பின் மூலம் கிடைத்த வெற்றிக்கு திமுக மட்டும் உரிமை கொண்டாடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

 

மேலும், மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்தவர்கள் திமுக என பகிரங்கமாக குற்றம்சாட்டிய அமைச்சர் விஸ்வநாதன், எங்கு வேண்டுமானாலும் இதை தைரியமாக கூறுவேன் என்றும் தெரிவித்தார்.

 

தன்னை விமர்சிப்பவர்கள் மற்றும் மிரட்டல் அரசியலை கண்டு தான் பயந்து ஓடப் போவதில்லை என்றும், மக்களை நம்பியே இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

தொடர்ந்து இடைத்தேர்தல் குறித்து பேசிய அமைச்சர் விஸ்வநாதன், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்தவுடன் மதுரைக்கு இடைத்தேர்தல் கொண்டு வரலாமா என்றும், தன்னை “போட்டுத் தள்ளிவிடலாமா” என்றும் சிலர் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

 

இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை நேரம் வரும்போது வெளியிடுவேன் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.