வவ்வால்களுக்காக தீபாவளி பட்டாசுகளைத் தவிர்க்கும் கிராம மக்கள் – குவியும் பாராட்டுகள்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பல்லேனஹள்ளி கிராமத்தில் கோவில் மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அதிகப்படியான சத்தம் வவ்வால்களைப் பாதிக்கக்கூடும் என்பதால், கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதை முழுமையாகத் தவிர்த்து வருகின்றனர்.
தங்களது கொண்டாட்டத்தைவிட வாயில்லா உயிரினங்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் கிராம மக்களின் இந்தச் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பறவைகள் மற்றும் விலங்குகள் மீதான அவர்களின் அக்கறைக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.




கருத்துகள் (0)