புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

வீட்டுத் தோட்டம் அமைக்க 75% வரை மானியம் – சேலம் ஆட்சியர் அறிவிப்பு!

வீட்டுத் தோட்டம் அமைக்க 75% வரை மானியம் – சேலம் ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் வீட்டுத் தோட்டம் அமைக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அரசு மானியம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வீடுகளில் காய்கறிகள் மற்றும் கீரைகளைப் பயிரிட்டு பயன்பெற விரும்புவோருக்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

இதன்படி, மாடித்தோட்டத் தளைகள், நிழல்வலைக் குடில் மற்றும் கீரைத் தொகுப்புகள் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல், காய்கறி விதைகள் மற்றும் பழச்செடிகள் அடங்கிய தொகுப்புகளைப் பெறுவதற்கு 75 சதவீத மானியம் அளிக்கப்படுகிறது.

 

இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் சேலம் மாவட்ட விவசாயிகள் மற்றும் இல்லத்தரசிகள், தங்களது விருப்பத்தைத் தெரிவித்து அருகிலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிப் பதிவு செய்து கொள்ளலாம். தகுதியானவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசு வழங்கும் மானிய உதவியைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.