புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைய வாய்ப்பு!

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைய வாய்ப்பு!

சர்வதேச சந்தையில் நேற்று உயர்வைக் கண்ட தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள், இன்று மீண்டும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளன. இதனால் தங்கம், வெள்ளி வாங்கத் திட்டமிடுபவர்கள் சந்தை நிலவரத்தை கவனித்து வருகின்றனர்.

 

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் தற்போது 3,856 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் ஒரு டாலர் குறைந்து 46 டாலராக உள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட இந்த விலை மாற்றம் சர்வதேச சந்தையில் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவின் தாக்கம் உள்ளூர் சந்தையிலும் எதிரொலிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் காரணமாக இன்று இந்தியாவிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னையில் தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.1,00,320-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.