10 நாட்களாக மழை பாதிப்பு குறித்து அறிக்கை இல்லை? – தமிழ்நாடு அரசு மீது புதிய குற்றச்சாட்டு..

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பாதிப்புகள் தொடரும் நிலையில், மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு (NDMA) கடந்த 10 நாட்களாக தமிழ்நாடு அரசு அறிக்கை அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 16 முதல் 26ஆம் தேதி வரை மழை பாதிப்பு தொடர்பாக அறிக்கை அளிக்காத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக சென்னையில் 36 செ.மீ. மழை பதிவானது, பர்லியார் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை அளித்ததாக NDMA இணையதளத்தில் தகவல் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மழை பாதிப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து தற்போது இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)