புதன், அக்டோபர் 28, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.32 கோடி மோசடி: போலீசார் விசாரணை!

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.32 கோடி மோசடி: போலீசார் விசாரணை!

 

 

சென்னை ஆவடியை அடுத்த குமணன்சாவடியைச் சேர்ந்த முகமது இப்ராஹிமிடம், தூத்துக்குடி மாவட்டம் அத்திரப்பட்டியைச் சேர்ந்த சுரேந்தர் (31) என்பவர் தன்னைப் பிரபல மருத்துவர் என அறிமுகப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. புதுக்கோட்டையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவரிடம் ரூ.32.77 லட்சம் பெற்றுள்ளார்.

 

இதற்காக போலியான டிஎன்பிஎஸ்சி பணி நியமன ஆணையையும் வழங்கியதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மொத்தம் ரூ.1.32 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.