“இனி நிரந்தர அரசு பணிகள் இல்லையா?” – தவெக அரசை கடுமையாக சாடிய கனிமொழி..

தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்குத் தவெக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் இந்த புதிய நடைமுறைக்கு எதிராக திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிக்கும் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ள கனிமொழி, “இனி நிரந்தர அரசுப் பணிகள் எதுவும் இல்லையா? எல்லாமே ஒப்பந்தப் பணிகள்தான் எனச் சொல்ல வருகிறதா தவெக அரசு?” என நேரடியாக விமர்சித்துள்ளார்.
மேலும், பல ஆண்டுகளாக அரசுப் பணிக்காக கடுமையாக உழைத்து, தேர்வுகளை எழுதி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலைக் கனவை இத்தகைய ஒப்பந்த முறை நியமனங்கள் சிதைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படுவது தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், கனிமொழி எம்பி எழுப்பியுள்ள இந்தக் கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் மத்தியில் இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.




கருத்துகள் (0)