பள்ளி மாணவர்களுக்கு ரத்தசோகை பரிசோதனை; ரூ.6.37 கோடியில் புதிய திட்டம் அறிமுகம்!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் உடல்நலத்தை மேம்படுத்தும் நோக்கில், ரத்தசோகை பாதிப்பைக் கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்குவதற்காக ‘இரும்பு கண்மணி’ என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளதா என்பது பரிசோதனை செய்து கண்டறியப்பட உள்ளது. பாதிப்பு இருப்பது தெரியவரும் மாணவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்தப் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு மொத்தம் ரூ.6.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடையே ஏற்படக்கூடிய ஊட்டச்சத்துக் குறைபாடுகளை அடையாளம் கண்டு, அவர்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மாணவர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்களிடையே ரத்தசோகை பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)