வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச ஆணழகன் போட்டி.. இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழ் நடிகர் எபனேசர் தேவராஜ்!

வியட்நாமில் நடைபெற்ற உலகளவிலான ஆணழகன் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழ் நடிகர் எபனேசர் தேவராஜ் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களை கைப்பற்றியுள்ள அவரது சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
37 வயதான எபனேசர் தேவராஜ், 'கருப்பங்காட்டு வலசு' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர். சினிமாவில் நடிப்பதுடன் மட்டுமல்லாமல், தனது உடல் ஆரோக்கியம் மற்றும் கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பராமரிப்பதிலும் தொடர்ந்து அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வந்துள்ளார்.
தனது தொடர் முயற்சிக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக சர்வதேச ஆணழகன் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை அவர் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள எபனேசர் தேவராஜுக்கு சக கலைஞர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.




கருத்துகள் (0)