திருமண ஊர்வலத்தில் விபத்து.. நெல் வயலில் கவிழ்ந்த கார்.. மணமக்களை மீட்ட கிராம மக்கள்!

வடக்கு வியட்நாமின் துயென் குவாங் மாகாணத்தில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தின்போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. பலத்த காற்று வீசியதில் மணமக்கள் வைத்திருந்த பூங்கொத்து பறந்து சென்று காரின் முன்பக்கக் கண்ணாடியை மறைத்துள்ளது. இதனால் ஓட்டுநரின் பார்வை பாதிக்கப்பட்டு, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சேறு நிறைந்த நெல் வயலில் கவிழ்ந்தது.
இதையடுத்து அப்பகுதி கிராம மக்கள் உடனடியாக ஒன்றிணைந்து காரை உயர்த்திப் பிடித்து, உள்ளே சிக்கியிருந்த மணமக்களைப் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் கர்ப்பிணியாக இருந்த மணமகளும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத விபத்தால் திருமண நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டாலும், பின்னர் திட்டமிட்டபடி திருமணச் சடங்குகள் அனைத்தும் மகிழ்ச்சியுடன் நடைபெற்றன.




கருத்துகள் (0)