புதன், அக்டோபர் 28, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மானாமதுரையில் அமில வாயு தாக்கி தொழிலாளி பலி.. தனியார் ஆலைக்கு சீல்!

மானாமதுரையில் அமில வாயு தாக்கி தொழிலாளி பலி.. தனியார் ஆலைக்கு சீல்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் ஆலையில், கடற்பாசியை பதப்படுத்தும் பணியின்போது வெளியான நச்சுவாயுவை சுவாசித்ததால், பணிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஜேசுதாஸ் (39) மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவருடன் பணியாற்றிய மற்ற தொழிலாளர்கள் இதனைத் தொடர்ந்து, சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா மற்றும் தாசில்தார் மகாதேவன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அந்த ஆலைக்குத் தற்காலிகமாக சீல் வைத்தனர். மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.