ஞாயிறு, நவம்பர் 15, 2026
உண்மையின் குரல்
ஆன்மிகம்

திருச்செந்தூரில் இன்று கோலாகலமாக நடைபெறும் சூரசம்ஹாரம்.. தங்கத் தேரில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்!

திருச்செந்தூரில் இன்று கோலாகலமாக நடைபெறும் சூரசம்ஹாரம்.. தங்கத் தேரில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா பக்தி உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. விழாவின் மிக முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவம்பர் 15) மாலை கோயில் கடற்கரையில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயில் முழுவதும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

 

சூரசம்ஹார நிகழ்வைக் காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் சுவாமி எழுந்தருளியதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. அப்போது பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டு, பக்திப் பரவசத்துடன் 'அரோகரா' முழக்கங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.