சென்னை காசிமேட்டில் ரவுடி வெட்டிக்கொலை; முன்விரோதம் காரணமா என போலீசார் விசாரணை!

சென்னை காசிமேடு பகுதியில் உள்ள பழைய மீன் ஏலக்கூடம் அருகே தீபாத் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவராகக் கூறப்படும் அவர், மர்ம நபர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலைக்குப் பின்னணியில் முன்விரோதம் ஏதேனும் உள்ளதா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.




கருத்துகள் (0)