ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

தேய்ந்த மூட்டுகளை மீண்டும் புதுப்பிக்க புதிய வழியை கண்டறிந்த விஞ்ஞானிகள்!

தேய்ந்த மூட்டுகளை மீண்டும் புதுப்பிக்க புதிய வழியை கண்டறிந்த விஞ்ஞானிகள்!

வயது அதிகரிக்கும்போது மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம் காரணமாக பலர் மூட்டுவலி, நடப்பதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள் சேதமடைவதால் வலி மற்றும் இயக்கக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. இதற்கு புதிய தீர்வை உருவாக்கும் வகையில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளனர்.

 

உடலில் அதிகரிக்கும் '15-PGDH' என்ற புரதம் குருத்தெலும்பு தேய்மானத்துடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த புரதத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம், சேதமடைந்த குருத்தெலும்புகளை மீண்டும் வளரச் செய்யும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஆரம்பகட்ட ஆய்வுகளில் இந்த முயற்சி வெற்றிகரமான முடிவுகளை அளித்துள்ளதால், எதிர்காலத்தில் மூட்டுத் தேய்மானத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு புதிய சிகிச்சை முறை உருவாகலாம் என நம்பப்படுகிறது. அறுவை சிகிச்சை இல்லாமல் மருந்துகள் மூலம் குருத்தெலும்புகளை மீண்டும் உருவாக்கி மூட்டுவலியை குறைக்கும் சிகிச்சை சாத்தியமாகுமா என்ற எதிர்பார்ப்பையும் இந்த ஆய்வு ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த சிகிச்சை மனிதர்களுக்கு பரவலாக பயன்பாட்டுக்கு வர இன்னும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.