கடைமுகத் தீர்த்தவாரி விழா: நவம்பர் 16-ல் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வாகக் கொண்டாடப்படும் கடைமுகத் தீர்த்தவாரியை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் வரும் நவம்பர் 16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 21-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் கந்தூரி விழாவை முன்னிட்டு நவம்பர் 20-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் (0)