வியாழன், அக்டோபர் 29, 2026
உண்மையின் குரல்
அரசியல்

தனுஷ் அரசியலுக்கு வந்தால் தவெகவுக்கு பாதிப்பா? – வட்டாரத்தில் பரபரப்பு..

தனுஷ் அரசியலுக்கு வந்தால் தவெகவுக்கு பாதிப்பா? – வட்டாரத்தில் பரபரப்பு..

 

 

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரக்கூடும் என்ற தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

 

தனுஷ் அரசியலுக்கு வந்தால், சினிமா ரசிகர்களின் வாக்குகள் பிரிய வாய்ப்புள்ளதாகவும், அதன் காரணமாக தவெகவின் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தவெகவினர் மத்தியில் அச்சம் நிலவுவதாக கூறப்படுகிறது.

 

குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவு தனுஷுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தவெகவினர் கருதுவதாக தெரிகிறது. இதனால், தனுஷ் தீவிர அரசியலுக்கு வந்தால் அது தங்களுக்கு நேரடியான இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவுவதாக கூறப்படுகிறது.

 

தனுஷின் அரசியல் வருகை குறித்த தகவல்கள் தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், அவரது அரசியல் களம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

 

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.