வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
சினிமா

ஹாரர் படத்தில் மீண்டும் கங்கனா ரணாவத் – ‘ஸ்கேரி பிக்சர்’ 2027ல் வெளியீடு!

ஹாரர் படத்தில் மீண்டும் கங்கனா ரணாவத் – ‘ஸ்கேரி பிக்சர்’ 2027ல் வெளியீடு!

நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகும் புதிய திகில் திரைப்படத்திற்கு ‘ஸ்கேரி பிக்சர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலக இயக்குநர் ரவி பாபு இப்படத்தை இயக்குவதுடன், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பிளையிங் ஃபாக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரிக்கவும் உள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவை நடிகர் ராணா வெளியிட்டுள்ளார்.

 

அந்த வீடியோவில், ‘கொடுங்கனவு விரைவில் அம்பலமாகும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் 2027ஆம் ஆண்டு திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ‘ராஜ்: தி மிஸ்டரி கன்டினியூஸ்’, ‘சந்திரமுகி 2’ உள்ளிட்ட திகில் படங்களில் நடித்துள்ள கங்கனா ரணவத், மீண்டும் ஹாரர் கதைக்களத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.