திருப்பதி ஏழுமலையானை தரிசித்த நடிகைகள் ஸ்ரீலீலா, ஸ்ரீ கவுரி பிரியா!

நடிகைகள் ஸ்ரீலீலா மற்றும் ஸ்ரீ கவுரி பிரியா ஆகியோர் இன்று (நவம்பர் 13) அதிகாலை ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் இருவரும் பங்கேற்று ஏழுமலையானை வழிபட்டனர்.
கோவிலுக்கு வருகை தந்த நடிகைகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். தரிசனத்தைத் தொடர்ந்து வேத பண்டிதர்கள் இருவருக்கும் வேத ஆசீர்வாதம் வழங்கினர். நடிகைகள் கோவிலுக்கு வந்த தகவல் அறிந்த பக்தர்கள் அவர்களுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் ரசிகர்களின் கவனம் நடிகைகள் பக்கம் திரும்பியது.




கருத்துகள் (0)