வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி – அறிமுகப் போட்டியிலேயே 6 விக்கெட் வீழ்த்திய வீரர்!

இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி – அறிமுகப் போட்டியிலேயே 6 விக்கெட் வீழ்த்திய வீரர்!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணி குறைந்த ரன்களில் சுருண்டது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 33.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகப் போட்டியில் களமிறங்கிய மஹ்லி பியர்ட்மேன் சிறப்பாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் அதிரடியாக ரன்கள் சேர்த்து வலுசேர்த்தார். அவரது அரைசதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி 23.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 132 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றியைப் பதிவு செய்தது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.