இந்திய அணியில் அதிரடி மாற்றம்.. ரோகித்துடன் தொடக்க வீரராக களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட்?

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெஸ்ட் தொடருக்கான பயிற்சி மற்றும் தயாரிப்புகளில் கவனம் செலுத்தும் வகையில் கேப்டன் சுப்மன் கில், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் ஆகியோர் அணியில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், நவம்பர் 13ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் நடைபெறவுள்ள 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அனுபவ வீரர் ரோகித் சர்மாவுடன் இணைந்து இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராகக் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அணியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களால் நியூசிலாந்துக்கு எதிரான அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.




கருத்துகள் (0)