செவ்வாய், நவம்பர் 10, 2026
உண்மையின் குரல்
இந்தியா

கள்ளத்தொடர்பை எதிர்த்த மகன் – கூலிப்படையை ஏவி 24 வயது இளைஞரைக் கொலை செய்த தாய்! பெல்காமில் அதிர்ச்சி சம்பவம்!

கள்ளத்தொடர்பை எதிர்த்த மகன் – கூலிப்படையை ஏவி 24 வயது இளைஞரைக் கொலை செய்த தாய்! பெல்காமில் அதிர்ச்சி சம்பவம்!

 

மகாராஷ்டிரா மாநில எல்லைப் பகுதியான கர்நாடகாவின் பெல்காமில், தனது கள்ளத்தொடர்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த 24 வயது மகனையே கூலிப்படையை ஏவி தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட இளைஞர் விஜய் நாராயண். அவரது தாய் மீனா நாராயணனுக்கும் ராகேஷ் என்பவருக்கும் இடையே இருந்ததாகக் கூறப்படும் முறையற்ற உறவை விஜய் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மீனா, மகனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ராகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து மகனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார். திட்டமிட்டபடி விஜயை காரில் அழைத்துச் சென்ற அவர்கள், குளிர்பானத்தில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து அவரை மயக்கமடையச் செய்துள்ளனர். பின்னர் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

கொலைக்குப் பிறகு, விஜயின் உடலை நெடுஞ்சாலையோர சாக்கடையில் வீசிவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மல்மாருதி காவல்துறையினர், தாய் மீனா உள்ளிட்ட ஆறு பேரைக் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பெற்ற மகனையே திட்டமிட்டுக் கொலை செய்ததாகத் தாய் மீது எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.