செவ்வாய், நவம்பர் 10, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

காதலன் உயிரிழந்த சோகம்: கன்னியாகுமரியில் 17 வயது மாணவி தற்கொலை!

காதலன் உயிரிழந்த சோகம்: கன்னியாகுமரியில் 17 வயது மாணவி தற்கொலை!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதலன் உயிரிழந்த துயரத்தைத் தாங்க முடியாமல் 17 வயது கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அமிர்தா கிருஷ்ணன் என்ற அந்த மாணவியின் காதலன் அர்ஜுன், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் ஐந்து நாட்களுக்கு முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. காதலனின் மரணச் செய்தியால் மனவேதனையில் இருந்த அமிர்தா, தனது வீட்டின் படுக்கையறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாலை நேரத்தில் மாணவர்களுக்கு வீட்டில் டியூஷன் வகுப்பு நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வந்த மாணவர்கள், அமிர்தா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.