வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
இந்தியா

காதலருடன் வீட்டை விட்டு வெளியேறிய திருமணமான பெண்! மகனையும் அழைத்துச் சென்றதால் கணவர் போலீசில் புகார்!

காதலருடன் வீட்டை விட்டு வெளியேறிய திருமணமான பெண்! மகனையும் அழைத்துச் சென்றதால் கணவர் போலீசில் புகார்!

தெலங்கானா மாநிலம் ஃபியூச்சர் சிட்டி காவல் எல்லைக்குட்பட்ட நெடுனூர் பகுதியில் உள்ள மான்யகுடா தாண்டாவைச் சேர்ந்த அனுஷா என்ற திருமணமான பெண், பிரேம் குமார் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி அனுஷா தனது மகனையும் உடன் அழைத்துக்கொண்டு பிரேம் குமாருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பிறகு இருவரும் எங்கு சென்றார்கள் என்ற விவரம் தெரியாமல் இருந்ததால் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.

 

இதற்கிடையே, தனது மகனின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து அச்சமடைந்த அனுஷாவின் கணவர், மனைவியையும் மகனையும் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.